6/1/13

குளிர்பானக் கேன்களால் ஆன சிற்பங்கள்

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மகான் என்ற நபர் தமது பொழுது போக்குக்காக வீசப்பட்ட குளிர்பானக் கேன்களை சேகரித்து சில சிற்பங்கள் செய்து வருகிறார். திரைப்படங்கள், சிறுவர் கார்டூன் மற்றும் வீடியோ கேம் போன்றவற்றில் வரும் மிகப் பிரபல்யம் வாய்ந்த உருவங்கள் மற்றும் ஏனைய மிருக மற்றும் உருவங்கள் சிற்பங்களாக செய்யப் படுகின்றன.

Blogger Tricks

உலகிலேயே மிகச் சிறிய செயல்படும் வயலின்

டேவிட் எட்வர்ட் என்ற நபர் உலகிலேயே மிகவும் சிறிய; ஆனால் செயல்படத்தக்க வயலினை உருவாக்கியுள்ளார். நவீன உபகரணங்கள் இன்றி தனது கரங்களாலே இவற்றைச் செய்து வருகிறார். இவை ஒவ்வொன்றும் £1,000 இற்கும் மேலாக விற்கப் படுவதும் குறிப்பிடத் தக்கது. தொழில் ரீதியாக ஒரு இசைக் கலைஞனாக இருந்த இவர், தனது தொழிலை மாற்றி நல்ல வருவாய் ஈட்டக் கூடிய இந்த முயற்சியில் இறங்கி, வெற்றியும் கண்டு வருகிறார். இந்த தொழில் மிகவும் மன திருப்தியைத் தருவதாகவும், இது போன்ற ஒரு சிறிய வயலின் செய்வதற்கு குறைந்தது மூன்று வாரங்கள் தேவைப் படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். [Via: Dailymail & BBC]

உடைந்த தளபாடப் பகுதிகளால் மிருகச் சிற்பங்கள்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மார்க் ஸ்பர்பில் என்பவர் கைவிடப் பட்ட உடைந்த தளபாடங்களை சேகரிப்பார். அவ்வாறு சேகரிக்கும் தளபாடங்களை தமது திறமையைக் கொண்டு வித்தியாசமான மிருகங்களிலான சிற்பங்களாக வடிவமைத்து வருகிறார். இவை கைவிடப்பட்ட தளபாடங்களிளிருந்து நுணுக்கமாக தெரிவு செய்யப் பட்ட பகுதிகளால் கவனமாக செய்யப் பட்டதும் குறிப்பிடத் தக்கது. அத்தோடு மட்டுமல்லாமல், மிக உயர்ந்த விலைக்கும் விற்கப் படுகிறது.



தொலைபேசி மூலம் கதவு திறக்கலாம்

முன் வாயிலில் உள்ள கதவு மணி தொல்லையாக உள்ளதா? எந்த வேலை செய்துகொண்டு இருக்கும் நிலையிலும், இடையே வேலையை விட்டுவிட்டு கதாவைத் திறந்து வந்தவருக்கு பதில் சொல்வது கடினமான விடயமே. அதே நேரம், உங்களது வீட்டிற்கு யார் யார் வருகிறார்கள் என்பதை வெளி ஊரில் இருந்து அவதானிப்பதும் கடினமே. அதைவிட, குடும்பத்தோடு வெளியே செல்லும் நிலையில், வீட்டிற்கு வருபவர்களின் வருகையை இழந்து விடும் அதே நேரம், அவர்களுக்கு சரியான தகவலைக் கொடுக்க முடியாத நிலையில் இருப்போம். தற்பொழுது இருக்கவே இறுக்கிறது 'Doorbot'. இது எடிசன் ஜூனியர் என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டது.

ஒரு USB இல் இருந்து இன்னொரு USB ப்ளாஷ் இற்கு இலகுவான தரவுப் பரிமாற்றம்

ஒரு USB இல் இருந்து இன்னொரு USB ப்ளாஷ் இற்கு அல்லது உங்களது மெமரி கார்ட் இற்கு தரவுகளைப் பரிமாற்றம் செய்ய, நிச்சயம் ஒரு கணினி தேவை. கணினி இல்லாமல் அப்படி தரவுகளை பரிமாற்ற, சில திறமை வாய்ந்த வாடிவமைப்பாலர்களால் எதிர்கால நோக்கம் கருதி வடிவமைக்கப் பட்டதே இந்த USB2USB. ஒரு கடன் அட்டை அளவு இருப்பதால், இலகுவாக உங்களது பர்ஸ் அல்லது பாக்கெட் இல் இட்டு சென்று, தேவையான போது தரவுகளை இலகுவாக பரிமாற்ற முடியுமாவதுடன், அவற்றைப் பார்க்க அல்லது கேட்கவும் செய்யலாம்.

14/2/12

ட்ரான்ஸ்ஃபார்மர் யுஎஸ்பி ப்ளாஷ் டிரைவ்கள்

இந்த ட்ரான்ஸ்ஃபார்மர் ப்ளாஷ் டிரைவ்கள் (Seatech) சீடெக் என்ற நிறுவனத்தின் மூலம்  மறுஉற்பத்தி செய்யப்படுகின்றன. இது விநாடிகளில் சிறுத்தைஃபிளாஷ் டிரைவ் உருமாறும், நம்பமுடியாதல்லவா? காட்டப்பட்டுள்ள படத்தைபார்க்க. இது பிரீமியம் அம்சங்களையும் இயக்கிதிறன் மற்றும் நம்பகமான சேமிப்பாயும உள்ளடக்கியது. USB டிரைவ் ஒருவிலங்கு உருமாறுகிறது முடியும்? அது ஒரு USB யாக மற்றும் ஒரு பொம்மையாக ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும் இது 4GB, 8GB மற்றும் 32 GB களில் கிடைக்கிறது. நீங்கள் எதற்காக காத்துக்கொண்டு இருக்க வேண்டும்?  [8GB-$ 13.20 வாங்கு, 32 GB வரை-$ 34.50 வாங்கு]


18/10/11

ஐபோன் 4s இற்குப் பிறகு வடிவமைத்த முதல் ஐபோன் 5 கான்செப்ட்.

ஐ போன் 4s அறிமுகப் படுத்தப் பட்டதன் பிறகு, முதன் முதலாக வடிவமைப்பாளர் அந்தோனியோ டி ரோசா என்பவரால் வடிவமைக்கப் பட்ட முதல் ஐ போன் வடிவமைப்பு இதுவாகும். இந்த வடிவம் சிறிது வித்தியாசமான ஹோம் பட்டன் ஐக் கொண்டதுடன், அலுமிநியத்திலான வெளிப்புறத் தோற்றத்தையும் உடையது. மேலும் இது, 4.3 இன்ச் ஸ்க்ரீன் ஐக் கொடதுடன், டுவல் கோர் ஆப்பிள் A6 புரோசெச்சர் ஐ யும் கொண்டது.